/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முந்திரி சாப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
/
முந்திரி சாப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
முந்திரி சாப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
முந்திரி சாப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
ADDED : பிப் 28, 2026 05:59 AM
சென்னை: முந்திரி சாப்பிட்ட 2 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை எம்.ஜி.ஆர்., நகர், மாணிக்கம்வாசகம் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார், 38; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அருணா, 30. இவர்களுக்கு, பிரிதிவினி, 5, ஹரிவர்தினி, 2 ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் இருந்தபோது, ஹரிவர்தினி முந்திரி சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. சில நிமிடங்களில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
நிலைமை கவலைக்கிடமாக மாறியதால், பெற்றோர் அவசரமாக குழந்தையை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.