sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டு வேலை கொத்தடிமைகளாக குழந்தைகள்... கொடுமை! சித்ரவதையில் சிக்கிய 5 பேர் அதிரடியாக மீட்பு

/

வீட்டு வேலை கொத்தடிமைகளாக குழந்தைகள்... கொடுமை! சித்ரவதையில் சிக்கிய 5 பேர் அதிரடியாக மீட்பு

வீட்டு வேலை கொத்தடிமைகளாக குழந்தைகள்... கொடுமை! சித்ரவதையில் சிக்கிய 5 பேர் அதிரடியாக மீட்பு

வீட்டு வேலை கொத்தடிமைகளாக குழந்தைகள்... கொடுமை! சித்ரவதையில் சிக்கிய 5 பேர் அதிரடியாக மீட்பு

2


ADDED : நவ 05, 2024 11:45 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:45 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் குழு -

சென்னையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர், சிறுமியரை அடித்து துன்புறுத்துவதும், சிகரெட் மற்றும் அயன்பாக்சால் சூடு வைப்பது, மிளகாய் துாளை கரைத்து குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. அடுத்தடுத்து பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் நிலையில், சென்னையில் ஒரே வீட்டில் கொத்தடிமையாக வேலை செய்த, 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளூந்துார்பேட்டையைச் சேர்ந்த, 18 வயதான, பிளஸ் 2 படித்த, ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த இளம் பெண், சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை செய்தார்.

திருவான்மியூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆண்ட்ரோ மதிவாணன், அவரின் மனைவி மெர்லினா ஆகியோர், அந்த இளம் பெண்ணை அடித்து சித்ரவதை செய்தனர். பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லை.

கல் நெஞ்சம்


வீட்டு வேலையை ஒழுங்காக செய்யவில்லை என, கூறி, மிளகாய் துாளை கரைத்து குடிக்க வைத்தும், சூடு வைத்தும் மெர்லினா சித்ரவதை செய்துள்ளார்.

இவர்களின் பிடியில் இருந்து சொந்த ஊருக்கு தப்பிச்சென்ற இளம் பெண், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின், சித்ரவதை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த இளம் பெண்ணின் தலையில் வெட்டுக்காயங்களும் இருந்தன.

தற்போது, இச்சம்பவத்தை விடவும், கல் நெஞ்சம் படைத்தவர்களால் மற்றொரு சிறுமி பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

அவர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருந்ததி தேவி. அவரும் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்துவிட்டதால், சிறுமியின் தாய் குடும்பத்தை நடத்தவே தத்தளித்தார். அருந்ததி தேவியையும், அவரது சகோதரனையும் படிக்க வைக்க முடியாமல் திணறினார்.

இதனால், தனக்கு தெரிந்தவர்கள் வாயிலாக வீட்டு வேலைக்கு மகளை அனுப்ப முடிவு செய்தார்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரில், கார்களை வாங்கி விற்பனை செய்யும் முகமது நிஷாத் என்பவர் வீட்டில், அவரின் 6 வயது மகனை பராமரிக்கும் பணியில், சிறுமியை வேலைக்கு சேர்த்தார்.

நான்கு மாதங்களுக்கு முன் பூப்பெய்திய சிறுமியை, முகமது நிஷாத், அவரின் மனைவி நாசியா ஆகியோர் சொந்த ஊருக்கு கூட அனுப்பாமல் இருந்துள்ளனர். கணவரின் அந்தரங்க பார்வை சிறுமி மீது பாய்ந்ததால், நாசியா சதி திட்டம் போட்டு, சிறுமி மீது திருட்டு பட்டம் சுமத்தி, சொல்லவே முடியாத அளவுக்கு, பிறப்பு உறுப்பை காயப்படுத்தி, உடல் முழுதும் அயன்பாக்ஸால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

தீபாவளி அன்று, முகமது நிஷாத் நண்பர் லோகேஷ், அவரின் மனைவி ஜெயசக்தி என, ஆறு பேர் சேர்ந்து சிறுமியை சித்ரவதை செய்து, அடித்தே கொன்றுவிட்டனர்.

இந்த அதிர்ச்சி அலை விலகாத நிலையில், சென்னை, வளசரவாக்கத்திலும் குழந்தைகளை கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தி, சித்ரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது.

வளசரவாக்கம், திருப்பதி நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர். சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். அவரின் மனைவி ரஷீதா, 50. அவர், சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா அருகே, கவரிங் நகை கடை நடத்தி வருகிறார்.

அவரின் வீட்டில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை ரசிதா, கொத்தடிமைகளாக்கி சித்ரவதை செய்து வருவதாக, குழந்தை நல அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர் அஷ்மீன் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி சோதனை


இதையடுத்து, அவர்களின் தலைமையில், கொத்தடிமைகள் மீட்பு குழுவினர், ரஷீதா வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 20 வயது இளம் பெண், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 20, 34 வயது பெண்கள் கொத்தடிமைகளாக அடைபட்டு இருந்தது தெரியவந்தது.

அவர்கள் ஐந்து பேரையும் மீட்டு, ஆர்.டி.ஓ., சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மீட்கப்பட்டவர்களில், 20 வயது பெண்ணை 1.50 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகளுக்கு வாங்கி வந்துள்ளனர்.

அதேபோல, மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து, 17 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளுக்கும், நான்கு லட்சம் ரூபாய்க்கு 20 வயது பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கும் வீட்டு வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களை கொத்தடிமைகளாக நடத்தியதோடு, சித்ரவதை செய்ததும் தெரியவந்துள்ளது.

இவர்களில் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தன் அக்காவையும், 34 வயது பெண் தன் மகளையும் பார்க்க வந்து சிக்கிக்கொண்டவர்கள்.

இவர்களை முன்பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தவில்லை.

இதனால், இருவரின் விருப்பத்தை ஏற்று சிறுவனையும், அந்த பெண்ணையும் சொந்த ஊருக்கு செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். மீட்கப்பட்ட மற்ற மூன்று பேரையும், மயிலாப்பூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள அரசு காப்பகங்களில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து, கிராம நிர்வாக அலுவலர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார், குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொத்தடிமை ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ரஷீதாவை நேற்று கைது செய்தனர்.

சென்னை மட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதிகளிலும் குழந்தை தொழிலாளர் பணியில் உள்ளனரா என, அதிரடி சோதனை நடத்த, குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் கொத்தடிமை மீட்பு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

'குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது கூடாது. யாராவது பணிக்கு அமர்த்தி இருப்பது தெரிந்தால், 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

சிறுமி கொலை

நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் அமைந்தகரை, சதாசிவம் மேத்தா நகரில், முகமது நிஷாத், 36, நாசியா, 30 தம்பதி, தன் வீட்டில் வேலை செய்த, தஞ்சையை சேர்ந்த 15 வயது சிறுமியை சித்ரவதை செய்து, கடந்த 31ம் தேதி கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக, தம்பதி உட்பட ஆறு பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறுமியை கொலை செய்தவர்கள்மீது, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், 30க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை அமைந்தகரை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை; சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோஷங்கள் எழுப்பினர்.



கரண்டியால் சூடு


சிறுமி மற்றும் பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்க ளிடம், சிறிய தொகையை கொடுத்து, மாதம் தோறும் சம்பளம் தந்து விடுவதாக கூறி, கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தி னேன். அவர்களுக்கு காலையில் இருந்து நள்ளிரவு வரை, ஏதாவது ஒரு வேலையைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

வேலை செய்ய மறுத்தால், அவர்களை ஆபாசமாக திட்டுவேன். கரண்டியால் சூடு வைத்தும், பூரி கட்டையால் அடித்தும் கொடுமைப் படுத்தினேன். ஆனால், சம்பளம் கொடுக்க மாட்டேன்.

- கைதான ரஷீதா, அளித்த வாக்குமூலம்






      Dinamalar
      Follow us