/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர் அறிவியல் பூங்கா ரூ.80 கோடியில் திறப்பு
/
சிறுவர் அறிவியல் பூங்கா ரூ.80 கோடியில் திறப்பு
ADDED : நவ 20, 2025 03:09 AM
சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், 80.24 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் அறிவியல் பூங்காவை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், நேற்று திறந்து வைத்தார்.
கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், குழந்தைகளுக்கு விளையாட்டின் வழியே அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில், 80.24 கோடி ரூபாயில், சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 'ஸ்டெம்' எனும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் வகையில், 10 கருவிகள் இடம்பெற்றுள்ளன.
இயற்பியல், உயிரியியல், கணிதம் ஆகிய அறிவியலின் தனிப்பிரிவுகளுக்கான கருவிகள், 11 என, மொத்தம் 21 கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்காவை நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், பொது நுாலக இயக்குநர் ஜெயந்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன், அண்ணா நுாற்றாண்டு நுாலக முதன்மை நுாலகர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

