/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் சேவை பொங்கலுக்கு துவக்கம்?
/
ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் சேவை பொங்கலுக்கு துவக்கம்?
ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் சேவை பொங்கலுக்கு துவக்கம்?
ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் சேவை பொங்கலுக்கு துவக்கம்?
ADDED : நவ 20, 2025 03:09 AM
சென்னை: பொங்கலுக்காவது, சென்னை - ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் - மைசூர், கோவை, எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ரயில்களிலும், பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
நெரிசல் அதிகமாக உள்ள எழும்பூர் - ராமேஸ்வரம் தடத்திலும், வந்தே பாரத் ரயில் இயக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இன்னும் பயன் பாட்டிற்கு வரவில்லை.
வரும் பொங்கல் பண்டி கைக்கான முன்பதிவு, அனைத்து விரைவு ரயில்களிலும் முடிந்து விட்டது. சிறப்பு ரயில்களுக்காக பயணியர் காத்திருக்கின்றனர்.
எனவே, பயணியர் பயன்பெறம் வகையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு, சென்னை - ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் சேவை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.