/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடி காஞ்சியில் நஷ்டமடைந்த சிப்காட் நிறுவனங்கள்
/
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடி காஞ்சியில் நஷ்டமடைந்த சிப்காட் நிறுவனங்கள்
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடி காஞ்சியில் நஷ்டமடைந்த சிப்காட் நிறுவனங்கள்
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடி காஞ்சியில் நஷ்டமடைந்த சிப்காட் நிறுவனங்கள்
ADDED : டிச 22, 2024 12:25 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம், பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகால் உள்ளிட்ட ஏழு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன.
இங்குள்ள ஏராளமான தொழிற்சாலைகளில், அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். நிறுவன வங்கி கணக்குகளின் வரவு - செலவு, மூலப்பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவற்றின் மீது, அந்தந்த நிறுவன குழுவினர் தணிக்கை செய்வர்.
அந்த வகையில் ஐந்து ஆண்டுகளில் நடத்திய ஆய்வில், பல தொழிற்சாலைகளில் ஊழியர்கள் முறைகேடு, மோசடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரையிலான ஒரே ஆண்டில், ஐந்து தொழிற்சாலைகளில், பல்வேறு வகையிலான மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 5.2 கோடி ரூபாய்க்கான இந்த மோசடி சம்பவங்களால், தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனியார் தொழிற்சாலைகளில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது.
இவற்றை தடுக்க, பண பரிமாற்றம் செய்யும்போது ஊழியர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைவிட, கூட்டு முடிவுகளை எடுப்பதும், பாஸ்வேர்ட், ஓ.டி.பி., போன்ற பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தொழிற்சாலைகளின் நிதித்துறை ஊழியர்கள் மீது, நிர்வாகம் தனி கவனம் செலுத்துகிறது. அரசு துறைகளில், அரசின் திட்டங்களில் முறைகேடு, ஊழல் போன்ற பிரச்னை அதிகளவில் எழும் சூழலில், தனியார் தொழிற்சாலைகளிலும் நிதி மோசடி, ஊழல், திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு, பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.