/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சினிமா நடன கலைஞர், மாணவர்கள் போதை பொருள் வழக்கில் கைது
/
சினிமா நடன கலைஞர், மாணவர்கள் போதை பொருள் வழக்கில் கைது
சினிமா நடன கலைஞர், மாணவர்கள் போதை பொருள் வழக்கில் கைது
சினிமா நடன கலைஞர், மாணவர்கள் போதை பொருள் வழக்கில் கைது
ADDED : செப் 25, 2025 12:44 AM
சென்னை,:அசோக் நகரில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த, சினிமா நடன கலைஞர், கல்லுாரி மாணவர்கள் உட்பட 12 பேரை, போலீசார் கைது செய்தனர்.
அசோக் நகர், 21வது அவென்யூ மற்றும் 95வது தெரு சந்திப்பில், போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசார், நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த, வடபழனியைச் சேர்ந்த பிரவீன், 27, என்பவரை கைது செய்தனர். இவர், சினிமா துறையில் குழு நடன கலைஞராக பணியாற்றி வருவதும், நடிகர் விஜயின் கோட் படத்தில் நடன கலைஞராக பணியாற்றியதும் தெரியவந்தது.
தன்னுடன் கல்லுாரிய ி ல் படித்த நண்பர் யுவுராஜ், 27, என்பவரிடம் போதை பொருட்கள் வாங்கி, சினிமா துறையில் பலருக்கும் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இவரது தகவலையடுத்து, வடபழனியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்கும் பரத், 22; சென்னை பல்கலை பி.காம்., மாணவர் லோகேஷ்குமார், 21; தனியார் கல்லுாரி மாணவர் விக்னேஷ்வரன், 22; தனியார் வங்கி ஊழியர் யுவராஜ், 27; தஞ்சாவூர் சம்பத்குமார், 21, கதிர்வேலு, 25, அம்பத்துார் கலைசெல்வன், 22, கடலுார் ரகுராம், 25, சென்னை, பாலவாக்கம் மல்லிகார்ஜூன் சர்மா, 28, சைதாப்பேட்டை பாலசூர்யா, 28, ஆகிய 12 பேரை, நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 7 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 2 கிராம் கேட்டமைன், 130 எல்.எஸ்.டி., ஸ்டாம், 70 கிராம் ஓ.ஜி., கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.