/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'குடி'மகன்கள் அட்டகாசம் நங்கநல்லுார் எம்.ஜி.ஆர்., சாலை மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்
/
'குடி'மகன்கள் அட்டகாசம் நங்கநல்லுார் எம்.ஜி.ஆர்., சாலை மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்
'குடி'மகன்கள் அட்டகாசம் நங்கநல்லுார் எம்.ஜி.ஆர்., சாலை மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்
'குடி'மகன்கள் அட்டகாசம் நங்கநல்லுார் எம்.ஜி.ஆர்., சாலை மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2025 12:34 AM

நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்., சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு வரும் 'குடி'மகன்கள் அட்டகாசத்தால் பெண்கள், பள்ளி மாணவ - மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் எம்.ஜி.ஆர்., சாலை, பிரதான வழித்தடமாக உள்ளது. இச்சாலையில் மாநகர பேருந்துகள் உட்பட, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தனியார் கல்லுாரிகள், அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் ஆயிரக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் உள்ள ஏழூர்அம்மன் கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சாலையில் வெற்றி திரையரங்கம் எதிரில், பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, எண்: -4085 என்ற டாஸ்மாக் கடை, மதுக்கூட வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
நங்கநல்லுார், 5வது பிரதான சாலை, எம்.ஜி.ஆர்., சாலை சந்திப்பில் இருந்த டாஸ்மாக் கடை இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அப்போதே இந்த கடையையும் மூடவேண்டும் என, கோரிக்கை எழுந்தும், அலட்சியப்படுத்தப்பட்டது.
இந்த மதுக்கடையில், மது அருந்தி சாலை, திரையரங்க முகப்பு, பேருந்து நிறுத்தம், பிளாட்பாரத்தில் 'குடி' மகன்கள் அலங்கோலமாக படுத்து கிடப்பதுடன், போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால், அடிக்கடி போதை ஆசாமிகளுக்கும் அப்பகுதி மக்களும் இடையே ஏற்படும் தகராறு, காவல் நிலையம் சென்றாலும் பேச்சளவில் தீர்க்கப்பட்டு விடுகிறது.
போதை ஆசாமிகளால் மாலையில் பள்ளி, கல்லுாரி முடிந்து திரும்பும் மாணவியர், பணி சென்று திரும்பும் பெண்கள், மாலை, இரவு குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மாலை நேரங்களில், மதுக்கடைக்கு வரும் 'குடி'மகன்கள் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது.
பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வரும் நிலையில், முதல்வர் தலையிட்டு நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். - -நமது நிருபர் --

