/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போன் பறித்த திருடர்களுக்கு தர்ம அடி தந்த பொதுமக்கள்
/
போன் பறித்த திருடர்களுக்கு தர்ம அடி தந்த பொதுமக்கள்
போன் பறித்த திருடர்களுக்கு தர்ம அடி தந்த பொதுமக்கள்
போன் பறித்த திருடர்களுக்கு தர்ம அடி தந்த பொதுமக்கள்
ADDED : ஜன 03, 2026 05:58 AM
வியாசர்பாடி: புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைவாணன், 52; வில்லிவாக்கத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று, வியாசர்பாடி, கணேசபுரம் மெயின் தெரு வழியாக, சைக்கிளில் வந்தபோது, 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்த இரு மர்ம நபர்கள், கலைவாணனை மிரட்டி, சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பியபோது, நிலைதடுமாறி விழுந்தனர்.
சுதாரித்த கலைவாணன், பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பிடித்து, தர்ம அடி கொடுத்து, வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பல்வேறு மொபைல் போன் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, கொடுங்கையூர், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த ராஜேஷ், 25, மதுரவாயல் ரகுமான், 25, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஆறு மொபைல் போன்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.