/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியில் இருந்து விழுந்து பீஹார் வாலிபர் பலி
/
மாடியில் இருந்து விழுந்து பீஹார் வாலிபர் பலி
ADDED : ஜன 03, 2026 05:59 AM
நீலாங்கரை: மது போதையில், இரண்டாவது தளத்தில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீஹார் மாநிலம், பிரிதீப்பூர் கிராமத்தைச் சேர்ந்தோர் ராஜேஷ், 35, விஷால், 25; கட்டுமான தொழிலாளர்கள்.
சென்னை, நீலாங்கரை, சந்தீப் அவென்யூ பகுதியில், புதிதாக கட்டி வரும் கட்டடத்தில் இருவரும் தங்கி, டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இரண்டாவது தளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், ராஜேஷ், கால் இடறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற விஷாலும், மாடியில் இருந்து விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். விஷாலுக்கு முதுகு தண்டுவடம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நீலாங்கரை போலீசாா், ராஜேஷ் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

