/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடி படிக்கட்டில் இருந்து தடுமாறி விழுந்தவர் பலி
/
மாடி படிக்கட்டில் இருந்து தடுமாறி விழுந்தவர் பலி
மாடி படிக்கட்டில் இருந்து தடுமாறி விழுந்தவர் பலி
மாடி படிக்கட்டில் இருந்து தடுமாறி விழுந்தவர் பலி
ADDED : ஜன 03, 2026 05:59 AM
ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், காந்தி நகரைச் சேர்ந்தவர் கிஷோர், 35; கார் ஓட்டுநர். இவரது மனைவி ஜெயஸ்ரீ, 32; வழக்கறிஞர்.
மது போதைக்கு அடிமையான கிஷோர், கடந்த 40 நாட்களாக ஆவடி, காமராஜர் நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று, கடந்த 20ம் தேதி வீடு திரும்பியுள்ளார்.
பட்டாபிராம், அம்பேத்கர் நகரில் உள்ள அவரது நண்பர் சந்துரு, 35, என்பவரின் வீட்டு மாடியில், இருவரும் நேற்று மது அருந்தியுள்ளனர்.
அதீத மது போதையில் இருந்த கிஷோர், வீட்டுக்கு செல்வதற்காக மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக இறங்கிய போது தடுமாறி விழுந்ததில், பின் தலையில் அடிபட்டு மயங்கி உள்ளார்.
தகவலின் படி, ஆம்புலன்சில் வந்த செவிலியர்கள் அவரை சோதனை செய்தபோது இறந்தது தெரிந்தது.
பட்டாபிராம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

