/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் மீது மாநகர பஸ் மோதல் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
/
பைக் மீது மாநகர பஸ் மோதல் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
பைக் மீது மாநகர பஸ் மோதல் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
பைக் மீது மாநகர பஸ் மோதல் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
ADDED : நவ 06, 2024 12:12 AM
தாம்பரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரதீப், 25, பிரகாஷ், 23. இருவரும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று மாலை, ஜி.எஸ்.டி., சாலை வழியாக 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர். வாகனத்தை பிரதீப் ஓட்டினார்.
தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனை அருகே சென்றபோது, பல்லாவரத்தில் இருந்து கோவளத்திற்கு சென்ற மாநகர பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்தார்; பிரகாஷ் படுகாயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் காயமடைந்த பிரகாஷை, 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் ஏற்பட்டது.