/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொருக்குபேட்டை சிறுமிக்கு பிளேடால் சரமாரியாக வெட்டு
/
கொருக்குபேட்டை சிறுமிக்கு பிளேடால் சரமாரியாக வெட்டு
கொருக்குபேட்டை சிறுமிக்கு பிளேடால் சரமாரியாக வெட்டு
கொருக்குபேட்டை சிறுமிக்கு பிளேடால் சரமாரியாக வெட்டு
UPDATED : ஏப் 26, 2025 06:58 AM
ADDED : ஏப் 26, 2025 12:27 AM

ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட, கொருக்குபேட்டையில் வசிக்கும் 17 வயது சிறுமியின் அத்தை மகனுக்கு, 35, திருமணமாகி குழந்தை இல்லை.
இதனால் அத்தை மகன், சிறுமியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 15ம் தேதி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, 35 வயது அத்தை மகனை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அத்தை மகனின் 38 வயதுடைய அண்ணன், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். தம்பியை எப்படி சிறைக்கு அனுப்பலாம் எனக்கூறி தகராறு செய்தார்.
ஆத்திரத்தில் இருந்த அவர், அங்கு கிடந்த பிளேடால், சிறுமியின் வலது கன்னம், கை, மணிக்கட்டு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கிழித்தார். படுகாயமடைந்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். குடும்பத்தினர் சிறுமியை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 38 வயது அத்தை மகன், அதற்கு உதவியாக இருந்த அவரது நண்பன் ஆகிய இருவரை தேடுகின்றனர்.

