/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் ரோந்து வாகனத்தில் பணம், மொபைல் போன் திருட்டு
/
போலீஸ் ரோந்து வாகனத்தில் பணம், மொபைல் போன் திருட்டு
போலீஸ் ரோந்து வாகனத்தில் பணம், மொபைல் போன் திருட்டு
போலீஸ் ரோந்து வாகனத்தில் பணம், மொபைல் போன் திருட்டு
ADDED : ஏப் 22, 2025 12:40 AM
கே.கே., நகர்,
கே.கே., நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் மதுரை வீரன், 33. இவர், 19ம் தேதி இரவு, போலீஸ் ரோந்து வாகனத்தில் ஓட்டுநராக பணியில் இருந்தார்.
ரோந்து முடிந்து, ராஜமன்னார் சாலை - 80 அடி சாலை சந்திப்பில் உள்ள காவல் மையத்திற்கு முன், அடுத்த நாள் அதிகாலை போலீஸ் வாகனத்தை நிறுத்தி, கழிப்பறைக்கு சென்றார்.
பின், திரும்பி வந்து பார்த்தபோது, போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த அவரது பேக் மாயமானது தெரியவந்தது. அதில், 4,000 ரூபாய், மொபைல் போன் மற்றும் ஏ.டி.ஏம்., அட்டை உள்ளிட்டவை இருந்துள்ளன.
காவல் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கே.கே., நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.