/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலை நிர்வகிப்பதில் மோதல்: 4 பேர் கைது
/
கோவிலை நிர்வகிப்பதில் மோதல்: 4 பேர் கைது
ADDED : அக் 23, 2024 12:40 AM
எம்.கே.பி., நகர்,
வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் சேர்ந்த முரளி, 54. இவர், நேற்று முன்தினம் இரவு, குடித்துக்விட்டு வீட்டருகே நின்று, ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
எதிர் வீட்டில் வசிக்கும் குப்பன், 67, என்பவர், தன்னை தான் திட்டுவதாக நினைத்துக் கொண்டு, முரளியிடம் கேட்டுள்ளார்.
இதன் காரணமாக, இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், குப்பன், ஜெயந்தி மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த சுகன்யா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து, இரு தரப்பினரும் எம்.கே.பி., நகர் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார், முரளி, 54, மற்றும் குப்பன் தரப்பைச் சேர்ந்த நவீன், 21, திவ்யா, 19, ரேகா, 36, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வீட்டருகே இருக்கும், முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகத்தை, முரளி ஐந்து ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். கடந்த சில மாதங்களாக, குப்பன் தரப்பினர் நிர்வகித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.