/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வைத்தீஸ்வரன் கோவிலில் துாய்மைப்பணி
/
வைத்தீஸ்வரன் கோவிலில் துாய்மைப்பணி
ADDED : ஏப் 28, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில், ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் நேற்று, துாய்மைப் பணி நடந்தது.
மரம் நடுதலின் அவசியம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீதி உலா நடந்தது.
தொடர்ந்து, மரக்கன்றுகள் நடுதலையும், பிளாஸ்டிக் ஒழிப்பையும் வலியுறுத்தி, பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
உலக மக்கள் நலன் வேண்டி, பன்னிருதிருமுறை பாராயணம் பாடி, கூட்டுப்பிரார்தனை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

