/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி
/
'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி
'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி
'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி
ADDED : ஜன 28, 2025 12:29 AM
சென்னை, தேசிய துாய்மை தினம் வரும், 30ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில், 'அதுல்யா சீனியர் கேர்' சார்பில், பெசன்ட் நகர் கடற்கரையில், துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து, அதுல்யாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
கோவில்களுக்கு முதியோர் சிரமமின்றி சென்று வர வசதியை மேம்படுத்துவது; மகிழ்ச்சியான வயது முதிர்வை ஊக்குவிக்க 'வாக்கத்தான்' நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது என, பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.
சுற்றுச்சூழல் மீதான அக்கறை, மூத்த குடிமக்களது நல்வாழ்வு ஆகிய இரண்டின் மீதும், உறுதியான நோக்கத்தோடு செயல்படுகிறோம்.
தேசிய துாய்மை தினத்தை நினைவூட்டும் ஒரு முயற்சியாக, பெசன்ட் நகர் கடற்கரையை துாய்மையாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதுல்யாவின் பணியாளர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர், கடற்கரையில் சிதறிக் கிடந்த குப்பை, கழிவு பொருட்களை அகற்றி, கடற்கரையை துாய்மையாக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.