/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் பராமரிப்பில் காலநிலை பூங்கா: சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
/
தனியார் பராமரிப்பில் காலநிலை பூங்கா: சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
தனியார் பராமரிப்பில் காலநிலை பூங்கா: சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
தனியார் பராமரிப்பில் காலநிலை பூங்கா: சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
ADDED : ஆக 10, 2025 12:12 AM
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை, பொது, தனியார் பங்கேற்பில் பராமரிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. பாரம்பரிய சின்னம் உள்ள பகுதியில் கட்டுமான பணிகளுக்கு, இந்திய தொல்லியல் துறை தடை விதித்தது.
இதனால், தடை இல்லாத பகுதியில், புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள பகுதியில், 16.90 ஏக்கர் பரப்பளவில், 15.20 கோடி ரூபாய் செலவில், காலநிலை பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்ட இந்த பூங்காவை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விட, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கான டெண்டர் அறிவிப்புகள், கடந்த மார்ச்சில் வெளியாகின.
சரியான நபர் கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
காலநிலை பூங்காவை பொது, தனியார் பங்கேற்பு அடிப்படையில் பராமரிக்க உரிய நிறுவனத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.