/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மணிக்கூண்டு' கட்டும் பணி பூங்கா ஸ்டேஷனில் தீவிரம்
/
'மணிக்கூண்டு' கட்டும் பணி பூங்கா ஸ்டேஷனில் தீவிரம்
'மணிக்கூண்டு' கட்டும் பணி பூங்கா ஸ்டேஷனில் தீவிரம்
'மணிக்கூண்டு' கட்டும் பணி பூங்கா ஸ்டேஷனில் தீவிரம்
ADDED : நவ 24, 2025 02:52 AM

சென்னை: பூங்கா ரயில் நிலையத்தில், மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணியரை கவரும் வகையில், மணிக்கூண்டு கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்திய ரயில்வே, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக, மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, சென்ட்ரல் பூங்கா ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள், 10.68 கோடி ரூபாய் செலவில், மும்முரமாக நடந்து வருகிறது. நடைமேடைகளில், நவீன ரக கூரைகள், இருக்கைகள், மூன்று மின்துாக்கிகள், தகவல் பலகை, நவீன ஒலிபெருக்கி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நுழைவு பகுதியில் பயணியரை கவரும் வகையில், 30 அடி உயரத்தில் மணிக்கூண்டு அமைக்கும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது.
அனைத்து பணிகளையும் முடித்து, அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

