/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னாள் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய த.வெ.க.,வினரால் சலசலப்பு
/
முன்னாள் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய த.வெ.க.,வினரால் சலசலப்பு
முன்னாள் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய த.வெ.க.,வினரால் சலசலப்பு
முன்னாள் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய த.வெ.க.,வினரால் சலசலப்பு
ADDED : நவ 24, 2025 02:50 AM
வளசரவாக்கம்: த.வெ.க., தலைவர் விஜய் குறித்து அவதுாறு பரப்புவதாக கூறி, தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் த.வெ.க., நிர்வாகியை, வீடு தேடி சென்று தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வளசரவாக்கம், 152வது வார்டு, பெத்தானியா நகரை சேர்ந்தவர் சமீர். இவர், கடந்த 16ம் தேதி, த.வெ.க.,வில் இருந்து விலகி, ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்தார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில், தி.மு.க., நிர்வாகி என அடையாளப்படுத்திக்கொண்ட சமீர், த.வெ.க., பற்றியும், அதன் தலைவர் விஜய் பற்றியும் ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால், சமீருக்கும் த.வெ.க., நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்னை நீடித்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், சமீர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த த.வெ.க., நிர்வாகிகள் சிலர், சமீரின் வீட்டின் அருகே சென்று தகராறு செய்தனர்.
இதில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டு, சாலையில் கட்டிப்புரண்டனர். இதை கண்ட சமீர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ், 51, சண்டையை தடுக்க முயன்றார். அதில், அவரின் மூக்கில் குத்து விழுந்து, ரத்தம் சொட்டியது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி வந்த வளசரவாக்கம் போலீசார், இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

