நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நடைபாதையில் மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ராயப்பேட்டை, ஜானி ஜான் கான் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 36; கூலித்தொழிலாளி. கடந்த 19ம் தேதி காலை வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சர்ச் அருகே, நடைபாதையில் மயங்கி கிடந்தார்.
அப்பகுதியினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

