/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அஜித்குமார் குடும்பத்திற்கு ச.ம.க., உதவி
/
அஜித்குமார் குடும்பத்திற்கு ச.ம.க., உதவி
ADDED : ஜூலை 05, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, போலீசார் தாக்கியதில் உயிரிழந்த பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு, சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆறுதல் கூறி, நிதியுதவி அளித்தனர்.
உயிரிழந்த, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் வீட்டிற்கு, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நேற்று முன்தினம் சென்றார். அஜித்குமார் உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
பின், அவரது தாய் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறி, 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.