/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஞாயிறுதோறும் 150 பஸ்கள் குறைப்பால் பயணியர் தவிப்பு
/
ஞாயிறுதோறும் 150 பஸ்கள் குறைப்பால் பயணியர் தவிப்பு
ஞாயிறுதோறும் 150 பஸ்கள் குறைப்பால் பயணியர் தவிப்பு
ஞாயிறுதோறும் 150 பஸ்கள் குறைப்பால் பயணியர் தவிப்பு
ADDED : ஜூலை 05, 2025 11:49 PM
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமைகளில், 150 மாநகர பேருந்துகளை குறைத்து இயக்குவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
சென்னை புறநகரில் தினமும், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரின் எல்லை விரிவடைந்து வருவதால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கோவளம், மாமல்லபுரம், எண்ணுார், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சீரான பேருந்து வசதி இல்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் குறைத்து இயக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வர, பொது போக்குவரத்து சேவையில், மாநகர பேருந்துகள் முக்கியமானவை. ஆனால், இந்த பேருந்துகளின் இயக்கம் சீராக இல்லை.
ஒரே வழித்தடத்தில், ஒரே நேரத்தில், மூன்று அல்லது நான்கு பேருந்துகள் வரிசையாக செல்கின்றன. அதன்பின், 30 முதல் 45 நிமிடங்கள் வரை, பேருந்து சேவை கிடைப்பதில்லை. இதனால், பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்துகள் சேவை குறைக்கப்படுவதால், பயணியர்அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் கூறியதாவது:
வார விடுமுறை நாட்களில் பயணியர் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், 10 முதல் 20 சதவீத பேருந்துகளை குறைத்து இயக்குவது வழக்கமான ஒன்று தான். அலுவலக நாட்களில் 3,000 பஸ்கள் இயக்கப்படும். நிர்வாக அறிவுரைப்படி, ஞாயிற்றுக்கிழமைகளில், 2,850 பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.