/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.25 கோடியில் திருமண மாளிகை முதல்வர் திறப்பு
/
ரூ.25 கோடியில் திருமண மாளிகை முதல்வர் திறப்பு
ADDED : டிச 19, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்: கொளத்துார் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம்., குடியிருப்பு ஜம்புலிங்கம் சாலையில், சென்னை மாநகராட்சி சார்பில், 25.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, அண்ணா திருமண மண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருமண மண்டபத்தில் நேற்று 15 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 17.47 கோடி ரூபாய் மதிப்பில், கொளத்துார் ஜி.கே.எம்., குடியிருப்பில், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டுமான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

