/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டான்லிக்கு இணையாக பெரியார் நகர் ஜி.ஹெச்., கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவு
/
ஸ்டான்லிக்கு இணையாக பெரியார் நகர் ஜி.ஹெச்., கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவு
ஸ்டான்லிக்கு இணையாக பெரியார் நகர் ஜி.ஹெச்., கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவு
ஸ்டான்லிக்கு இணையாக பெரியார் நகர் ஜி.ஹெச்., கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவு
ADDED : ஏப் 01, 2025 01:07 AM

சென்னை, முதல்வரின் கொளத்துார் சட்டசபை தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு, 210 கோடி ரூபாய் செலவில் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
இதில், 560 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பழைய கட்டடத்தில், 300 படுக்கைகள் உள்ளது. நரம்பியல், முடநீக்கியல், இதயவியல் உள்ளிட்ட 25 சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மார்பக சிறப்பு சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. இங்கு, 639 மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
கூடுதல் வசதிகளுடன் இந்த மருத்துவமனையை, பிப்., 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வடசென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, அதிகளவில் நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதற்கு இணையாக சிகிச்சை அளிப்பதற்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் கேட்டறிய அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அமைச்சர்கள் இருவரும், நேற்று மருத்துவமனை வளாகத்திற்கு சென்று, இரண்டு மணி நேரம் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை, முதல்வரிடம் காண்பிப்பதற்காக, வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.
ஆய்வுக்கு பின், அமைச்சர் வேலு கூறியதாவது:
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் ஒன்பது ஆப்பரேஷன் தியேட்டர்கள் தான் உள்ளன. ஆனால், பெரியார் நகர் மருத்துவமனையில் 10 ஆப்பரேஷன் தியேட்டர்கள் கட்டப்பட்டு உள்ளன. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சிறப்பு ஆப்பரேஷன் தியேட்டர் வசதி உள்ளது. மார்பக சிகிச்சை தொடர்பாக, நாள்தோறும் 125 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதல்வர் உத்தரவுப்படி, நோயாளிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தோம். நல்ல சிகிச்சை தருவதாக நோயாளிகள் தெரிவித்தனர். மூன்று வேளை வழங்கப்படும் உணவு விபரங்களையும் கேட்டறிந்தோம். வார்டுகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்தோம். மருத்துவமனைக்கு வடசென்னை மக்கள் அதிகளவில் வந்து சிகிச்சை பெற துவங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.