/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் முடிவு
/
40 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் முடிவு
40 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் முடிவு
40 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூலை 28, 2025 02:18 AM
சென்னை:சென்னை பெருநகரில் 40 இடங்களில், தனியார் கோரிக்கை அடிப்படையில் நில வகைப்பாடு மாற்றம் செய்ய, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் செயல்பாடுகள் குறித்து முடிவுகள் எடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, குழும கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில், 284வது குழும கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சமீபத்தில் நடந்தது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
நில வகைப்பாடு மாற்றம், வட சென்னை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் 40 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சில அலுவலர்கள் பணி ஓய்வு பெற அனுமதிப்பது, சிலரது பதவி உயர்வுக்காக விதிகளை தளர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்களுக்கும், இதில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்வது, வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவது, செங்கல்பட்டு பேருந்து நிலைய கட்டுமானத்தில் கூடுதல் வசதிகள் தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.