/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
16 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் * கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
/
16 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் * கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
16 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் * கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
16 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் * கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
ADDED : செப் 24, 2025 03:25 AM
சென்னை : சென்னை பெருநகரில், 16 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து, 21 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை பெருநகரில், இரண்டாவது முழுமை திட்டத்தின்படி, சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு வரையறை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வகைப்பாடுக்கு மாறாக, புதிய கட்டுமான திட்டத்தை செயல்படுத்த பலரும் விரும்புகின்றனர்.
இதுபோன்று தேவை ஏற்படும்போது, நில வகைப்பாடு மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம். பொது மக்களின் கருத்துகள் கேட்டு, தொழில்நுட்ப கமிட்டி கூட்டத்தில், பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்.
இதன்படி, புழல், ஒட்டியம்பாக்கம், சிட்லபாக்கம், மண்ணிவாக்கம், மயிலாப்பூர், அயப்பாக்கம் உள்ளிட்ட, 16 இடங்களில் நில வகைபாடு மாற்றத்துக்கு, சி.எம்.டி.ஏ.,வுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சென்னை பெரம்பூரில், சிறப்பு மற்றும் அபாயகரமான தொழில் உபயோக பகுதியாக உள்ள, 27 ஏக்கர் நிலத்தை, வணிக பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என, பின்னி மில்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில், ஆரம்ப பள்ளி என்ற வகைப்பாட்டில் உள்ள, 26,177 சதுர அடி நிலத்தை, அலுவலகம் மற்றும் கடைகள் கட்டுவதற்காக வணிக உபயோக பகுதியாக மாற்றக்கோரி தனி நபர் விண்ணப்பித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்கள் பெற, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தை அணுகலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
***