/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிகள் முடிந்ததும் கத்திவாக்கம் அங்காடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும் சி.எம்.டி.ஏ., விளக்கம்

ADDED : ஜன 08, 2025 09:58 PM
எண்ணுார்:'கத்திவாக்கம் காய்கறி அங்காடியில், தரைத்தளத்துடன் 77 கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது' என, சி.எம்.டி.ஏ., விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, சி.எம்.டி.ஏ., வெளியிட்ட செய்தி குறிப்பு குறிப்பு:
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத் தலைவர், சட்டசபையில், எண்ணுாரில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை மற்றும் சமுதாய கூடம், 5 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தினசரி காய்கறி அங்காடி மற்றும் சமுதாய கூடம் கட்டும் பணி துவங்கியது. இத்திட்டத்தின் மதிப்பு 14.70 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இரு பிரிவுகளை உள்ளடக்கி, சமுதாய கூடமானது தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், உணவருந்தும் அறை, மின்துாக்கி, சமுதாய கூடம், மணமகன், மணமகள் அறை, விருந்தினர் அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
தினசரி காய்கறி அங்காடியான, தரைத்தளத்துடன், 77 கடைகள், உணவகத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. வாகன பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையிலும், 42 டூ -- வீலர், 23 கார் நிறுத்துமிடம் அமைகிறது.
அதன்படி, இப்பணிகளை, மார்ச், 6, 2024ல், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழும பணிகள் நிறைவுற்ற பின், இத்திட்டத்தை பெருநகர் சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைக்கும். செயல்பாடு மற்றும் பராமரிப்பு சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.