/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோ - ஆப்டெக்ஸ் துணி 30 சதவீதம் தள்ளுபடி
/
கோ - ஆப்டெக்ஸ் துணி 30 சதவீதம் தள்ளுபடி
ADDED : மார் 29, 2025 03:39 AM

சென்னை:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், கைத்தறி மற்றும் விசைத்தறி ரகங்கள் அனைத்திற்கும் 30 சதவீத தள்ளுபடி விலையில், ஆடைகளை விற்கிறது. இதனுடன் ஆண்டு இறுதி விற்பனையையும் செய்கிறது.
இதன் அறிமுக விழா, எழும்பூரில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில், நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளரும், ஜஸ்டிஸ் பஷீர் அகமது பெண்கள் கல்லுாரியின் இணைப் பேராசிரியருமான பர்வீன் சுல்தானா பங்கேற்று, ரம்ஜான் சிறப்பு தன்ளுபடி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
வரும் 31ம் தேதி வரை, அனைத்து கோ - ஆப்டெக்ஸ் கடைகளில், இந்த சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, கோ - ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அருள்ராஜன் தெரிவித்தார்.