ADDED : ஜூன் 01, 2026 08:26 AM
அ நிறம் | அளவு
செம்பியம்: வியாசர்பாடி, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்தவர் தேவ அன்பு, 37; சென்னை குடிநீர் வாரிய ஓட்டுநர். உடன் பணியாற்றும் ராஜேஷ், 40, ஜெயவேல், 38 மற்றும் சரவணன், 40, ஆகியோர், வாரியத்திற்கு சொந்தமான பொருட்களை திருடி விற்று வந்துள்ளனர்.
இது குறித்து, உயரதிகாரிகளிடம் தேவ அன்பு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும், தேவ அன்புவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
செம்பியம் போலீசார், சக ஊழியர்கள் மூவரையும் நேற்று கைது செய்தனர்.
