/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க.,வினருக்குள் பனிப்போர் வடிகால்வாய் பணிகள் தாமதம்
/
தி.மு.க.,வினருக்குள் பனிப்போர் வடிகால்வாய் பணிகள் தாமதம்
தி.மு.க.,வினருக்குள் பனிப்போர் வடிகால்வாய் பணிகள் தாமதம்
தி.மு.க.,வினருக்குள் பனிப்போர் வடிகால்வாய் பணிகள் தாமதம்
ADDED : அக் 19, 2024 12:42 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி, கரையான்சாவடியில் நாவலர் தெரு உள்ளது. இந்த தெரு வழியை 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, கடந்த ஒரு மாதமாக மந்த கதியில் நடக்கிறது. இப்பணி, தி.மு.க., நிர்வாகிகளுக்கிடையே உள்ள முன்விரோதம் காரணமாக தாமதமாவதாக, பகுதிவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கால்வாய் கட்டுமான பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு, ஒரு மாதம் கடந்தும் பணிகள் முடியவில்லை.
வீட்டு வாசலில் கால்வாய் உள்ளதால் முதியவர்கள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. பெரியவர்கள் கால்வாயை தாண்டிச் செல்கிறோம்.
எங்கள் தெருவில் வசிக்கும் தி.மு.க., 17வது வார்டு கவுன்சிலர் மாலதியின் கணவர் ரவிக்குமாருக்கும், தி.மு.க.,வைச் சேர்ந்த பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனாவின் கணவர் சுதாகருக்கும் இடையே உள்ள அரசியல் முன்விரோதம் காரணமாக, கால்வாய் பணியை வேண்டுமென்றே தாமதமாக செய்கின்றனர்.
இதனால், அப்பாவி பொதுமக்கள் வேதனைக்குள்ளாகி வருகிறோம். கால்வாய் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, அதன் மீது நடந்து செல்லும் வகையில் சிமென்ட் 'சிலாப்' அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

