/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான நிறுவனத்திடம் ரூ.70 லட்சம் வசூலிக்க கலெக்டருக்கு உத்தரவு
/
கட்டுமான நிறுவனத்திடம் ரூ.70 லட்சம் வசூலிக்க கலெக்டருக்கு உத்தரவு
கட்டுமான நிறுவனத்திடம் ரூ.70 லட்சம் வசூலிக்க கலெக்டருக்கு உத்தரவு
கட்டுமான நிறுவனத்திடம் ரூ.70 லட்சம் வசூலிக்க கலெக்டருக்கு உத்தரவு
ADDED : நவ 18, 2025 06:47 AM
சென்னை: தனியார் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, 70.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, சென்னை மாவட்ட கலெக்டர் வசூலிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா நகர் பகுதியில், 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பை, 2008ல் கட்ட துவங்கியது. அதில் வீடு வாங்க, யோகி ஷெரப், ரிங்கு ஷெரப் ஆகியோர் பணம் செலுத்தினர்.
இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது குறித்து பணம் செலுத்தியவர்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 2019ல் புகார் அளித்தனர்.
குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காததால் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 70.60 லட்சம் ரூபாயை வட்டியுடன் அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் 2021ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும், அந்நிறுவனம் செயல்படுத்தவில்லை.
இதையடுத்து, வருவாய் மீட்பு ச ட்டப்படி, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து, இழப்பீட்டை வசூலிக்க ரியல் எஸ்டேட் ஆணையம், 2022ல் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர் பாக மனுதாரர், ரியல் எஸ்டேட் ஆணையத்தை மீண்டும் அணுகினார். இதில், ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள் சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், 2022ல் வாரன்ட் பிறப்பிக்கும் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவுப்படி, மனுதாரருக்கு தற்போது வரை இழப்பீடு கிடைக்கவில்லை.
எனவே, சென்னை மாவட்ட கலெக்டர் இது விஷயத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் பதிவாளர், இது தொடர்பாக கலெக்டருக்கு கடிதம் எழுதவும் உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

