/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊராட்சி தலைவியை ஏமாற்றி முறைகேடு பி.டி.ஓ., விசாரிக்க கலெக்டர் உத்தரவு
/
ஊராட்சி தலைவியை ஏமாற்றி முறைகேடு பி.டி.ஓ., விசாரிக்க கலெக்டர் உத்தரவு
ஊராட்சி தலைவியை ஏமாற்றி முறைகேடு பி.டி.ஓ., விசாரிக்க கலெக்டர் உத்தரவு
ஊராட்சி தலைவியை ஏமாற்றி முறைகேடு பி.டி.ஓ., விசாரிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : நவ 20, 2024 12:29 AM
மதுராந்தகம்,
மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சியில், தலைவியாக உள்ள சாந்தி என்பவர்,தன் கையெழுத்தை போலீயாக பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாக, துணை தலைவர் மஞ்சுளா மற்றும் நான்கு கவுன்சிலர்கள் மீது, கலெக்டரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தான் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் புறக்கணிப்பதாகவும், படிப்பறிவில்லாததால் ஏமாற்றி, ஊராட்சி பணத்தை கொள்ளையடிப்பதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் - கிராம ஊராட்சி, கோகுல கண்ணன் விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலர்மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, பி.டி.ஓ., கோகுலகண்ணன் உத்தரவிட்டிருந்தார்.
இதில், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் மட்டும்விசாரணையில் பங்கேற்றனர். பி.டி.ஓ., விசாரணைக்கு பின், ஊராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது:
கலெக்டரிடம் மனு அளித்தது குறித்து, யார் துாண்டுதலின் பேரில் மனு அளித்தீர்கள், ஏன் அளித்தீர்கள் என, வட்டார வளர்ச்சி அலுவலர் என்னிடம் கேட்டார்.
மூன்றாண்டுகளாக நடைபெறும் முறைகேடுகள் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். அலுவலர்கள்மாற்றப்பட்டதால், அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஊராட்சியில் நடந்த பணிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து கேட்டு அறியாமல், என்கவனத்திற்கு கொண்டு வராமல் பல பணிகளுக்கு போலியாக பில் தயார் செய்து, எனது கையெழுத்தை அவர்களே போட்டு ஊராட்சி பணத்தை எடுத்துள்ளனர்.
ஊராட்சியில் நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை குறித்து, ஊராட்சி துணைத் தலைவிமஞ்சுளாவிடம் கேட்டபோது, அவர் பதில் ஏதும் அளிக்காமல் சென்று விட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகண்ணன் கூறியதாவது:
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனருக்கு, புதுப்பட்டு ஊராட்சியில் நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் ஊராட்சி தலைவி அளித்த புகார் குறித்து கடிதம் அனுப்பப்பட உள்ளது.
ஊராட்சியில் நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் மனுவில் குறிப்பிட்டுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.