/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்காவுக்கு தனி நபர் பெயரில் வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவு
/
பூங்காவுக்கு தனி நபர் பெயரில் வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவு
பூங்காவுக்கு தனி நபர் பெயரில் வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவு
பூங்காவுக்கு தனி நபர் பெயரில் வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 18, 2025 03:32 AM
சென்னை, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 'ரோகினி கார்டன்' பகுதியில், பூங்கா, சாலைகளுக்கு தனி நபர்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டுவசதி வாரியம் சார்பில், 1977ல் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இங்கு, 48 கிரவுண்ட் நிலத்தில், பூங்கா, சாலைகளுக்கு இடம் விட்டு, 136 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
'ரோகினி கார்டன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த வளாகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளை கடந்த நிலையில், குடியிருப்பு சிதிலமடைந்துள்ளன.
இங்கு, வீடுகள் ஒதுக்கப்பட்டபோது, உட்புற சாலைகளுக்காக, 20.62 கிரவுண்ட் நிலமும், திறந்தவெளி ஒதுக்கீடு அடிப்படையில் பூங்கா அமைக்க, 10.49 கிரவுண்ட் நிலமும், சென்னை மாநகராட்சியிடம், வீட்டு வசதி வாரியம், 1987ம் ஆண்டில் ஒப்படைத்தது.
இந்நிலையில், இங்கு வீடு வாங்கிய நபர்கள் பெயரில் இங்குள்ள சாலை, பூங்காவாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கூட்டு பட்டா அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்வேறு தரப்பினர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புகார் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தனர். அதில் சாலை, பூங்கா நிலத்துக்கு தனி நபர்கள் பெயரில் கூட்டு பட்டா அளிக்கப்பட்டது தெரிந்தது.
இது தொடர்பாக மாநகராட்சி சார்பில், சென்னை மாவட்ட கலெக்டருக்கு, கடந்த மே 26ல் கடிதம் எழுதப்பட்டது.
இதன் அடிப்படையில், ரோகினி கார்டன் வீட்டு உரிமையாளர்கள் பெயரில் தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை நீக்கும்படி, சென்னை மாவட்ட கலெக்டர், தென் சென்னை கோட்டாட்சியருக்கு, ஆக.,13ல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை தவிர்த்து, மீதமுள்ள நிலத்தை, 136 குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், பிரிக்கப்படாத பங்கான யு.டி.எஸ்., உரிமையை நிர்ணயித்து கொடுக்க, தென்சென்னை கோட்டாட்சியர், மயிலாப்பூர் தாசில்தார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.