/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
/
லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜன 02, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை, வடபழனியைச் சேர்ந்தவர் சாருகேஷ், 19. பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். சக மாணவர் சஞ்சய், 19.
நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட, இருவரும் புல்லட் பைக்கில் இ.சி.ஆர்., சென்றனர்; சாருகேஷ் ஓட்டினார். அதிகாலை, வீடு திரும்பும்போது, நீலாங்கரை, வெட்டுவாங்கேணியில் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றது.
அப்போது, லாரி மீது பைக் மோதி சாருகேஷ் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயமடைந்த சஞ்சய், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விசாரிக்கின்றனர்.