/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை தடுப்பில் மோதி கல்லுாரி மாணவர் பலி
/
சாலை தடுப்பில் மோதி கல்லுாரி மாணவர் பலி
UPDATED : ஏப் 06, 2025 10:58 PM
ADDED : ஏப் 06, 2025 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவதர்ஷன், 19. வேளச்சேரியில் உள்ள
சகோதரி வீட்டில் தங்கி, தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து
வந்தார்.
நேற்று அதிகாலை 1:15 மணியளவில் 'கே.டி.எம் 250' என்ற மாடல் பைக்கில் தரமணி நோக்கி அதிவேகமாக சென்றார்.
இணைப்பு சாலையில் செல்லும்போது, முன்னால் சென்ற மற்றொரு பைக்கை முந்தி
செல்ல முயன்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறிய பைக், சாலை மைய தடுப்பில்
மோதியது.
இதில் கீழே விழுந்த தேவதர்ஷன், தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
விபத்து குறித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

