/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலி
/
கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஆக 14, 2025 12:39 AM

குன்றத்துார் நண்பர்களுடன் நடந்து சென்ற கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலியானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாடுதுறை, புதிய தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் நித்திஷ், 20. இவர், மேற்கு தாம்பரம் அடுத்த பூந்தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரியின் விடுதியில் தங்கி, ஏ.ஐ.டி.எஸ்., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை, நண்பர்களுடன் நடந்து சென்றபோது, திடீரென கீழே விழுந்ததில் நித்திஷ் மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், நித்திஷ் இறந்தது தெரியவந்தது.
விடுதியில் மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஒவ்வாமையால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.