/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு கல்லுாரி மாணவர் பலி
/
ரயிலில் அடிபட்டு கல்லுாரி மாணவர் பலி
ADDED : அக் 02, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், சோத்துபெரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார், 18. பட்டாபிராம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், கல்லுாரி முடித்து, வீட்டிற்கு செல்வதற்காக ஆவடி அடுத்த இந்து கல்லுாரி ரயில் நிலையம் வந்துள்ளார். அரக்கோணம் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
இதை யாரும் கவனிக்கவில்லை. முட்புதரில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று மதியம் போலீசாருக்கு ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆவடி ரயில்வே போலீசார், நவீன் குமார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

