/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'புல்லட்' ஓட்டி பழகிய கல்லுாரி மாணவர் பலி
/
'புல்லட்' ஓட்டி பழகிய கல்லுாரி மாணவர் பலி
ADDED : மார் 31, 2025 03:35 AM
அசோக் நகர்:தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 19. இவர், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, தன் நண்பரை பார்க்க கோடம்பாக்கம் வந்துள்ளார். அப்போது, நண்பனின் 'புல்லட்' பைக் எடுத்து ஓட்டிப் பார்த்தார்.
அசோக் நகர், 4வது அவென்யூ மாநகராட்சி பூங்கா அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில், கீழே விழுந்த சந்தோஷ்குமாரின் தலை, அருகில் இருந்த சுவரில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர் பைக்கில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.