/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அங்கன்வாடியில் குழந்தைகள் விளையாட வண்ண மெத்தைகள்
/
அங்கன்வாடியில் குழந்தைகள் விளையாட வண்ண மெத்தைகள்
ADDED : பிப் 21, 2025 12:29 AM

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், ராவணன் நகரில் தொடக்கப் பள்ளி உள்ளது. அதில், அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. அது பழுதடைந்ததால், அக்கட்டடத்தை இடித்து புதிதாக கட்டப்பட உள்ளது.
இதனால், அதே வளாகத்தில் வேறு ஒரு கட்டடத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்படுகிறது. மொத்தம் 200 சதுர அடி உடைய அந்த அறை மாநகராட்சி நிதி, 9.6 லட்சம் ரூபாயில் முன்மாதிரி அங்கன்வாடி மையமாக அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அறையில், குழந்தைகள் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க, தரை மற்றும் சுவரில் வண்ண மெத்தை அமைக்கப்பட்டு உள்ளது; பொம்மைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த முன்மாதிரி நவீன அங்கன்வாடி மையம், குழந்தைகளின் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.