/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு
/
20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு
ADDED : அக் 30, 2024 07:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஒவ்வொரு வார புதன் கிழமைகளிலும் குறைதீர் முகாம் நடக்கிறது. பொதுமக்களை, கமிஷனர் நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.
அதன்படி, நேற்று பொதுமக்களிடம், 20 புகார் மனுக்களை பெற்ற கமிஷனர் அருண், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் கூறியுள்ளார்.