/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
/
250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : ஏப் 10, 2025 11:42 PM

குன்றத்துார்,
குன்றத்துார் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், 250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி வரவேற்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அரசு சார்பில் வழங்கப்படும் இலவச சீர்வரிசை பொருட்களை, கர்ப்பிணியருக்கு வழங்கினார்.
இதில், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

