/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடையில் விழுந்து தொழிலாளர் பலியான சம்பவத்தில் நிறுவன அதிகாரி கைது இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

ADDED : அக் 07, 2025 12:33 AM
கொளத்துார், பாதாள சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளர் பலியான சம்பவத்தில், அஜாக்கிரதையாக செயல்பட்ட ஒப்பந்த நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இறந்தவர் குடும்பத்திற்கு, ஒப்பந்த நிறுவனம் சார்பில், நேற்று 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
கொளத்துார், திருப்பதி நகர் முதல் பி ரதான சாலையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில், கடந்த 4ம் தேதி, மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான 'வி ஸ்கொயர் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட்' நிறுவன மேலாளர் சுரேஷ்குமார், 46, மேற்பார்வையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குப்பன், 37, சங்கர், 40, மற்றும் வானகரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், 28, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது , பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த குப்பன், சடலமாக மீட்கப்பட்டார். குப்பனை மீட்க இறங்கிய, மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, விசாரித்த கொளத்துார் போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக நிறுவன மேலாளரான மாங்கா டைச் சேர்ந்த சு ரேஷ்கு மாரை, நேற்று கைது செய்தனர்.
குப்பன் குடும்பத்திற்கு அவரை பணிக்கு அமர்த்திய நிறுவனம் சார்பில், நேற்று 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஹரிஹரன் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.