/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 லட்சம் இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு
/
ரூ.10 லட்சம் இழப்பீடு தர நிறுவனத்திற்கு உத்தரவு
ADDED : ஜூலை 25, 2025 12:24 AM
சென்னை பெரும்பாக்கம் அடுத்த ஜல்லடியன்பேட்டையில், 'செலைன் எஸ்டேட்' என்ற நிறுவனம், 'கிரீன்ஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. இதில் வீடு வாங்க, ரங்கநாதன் கோவிந்தராஜ் என்பவர், 2012ல் ஒப்பந்தம் செய்தார்.
வீட்டுக்கான விலையாக பேசப்பட்ட, 63.56 லட்சம் ரூபாயை, கட்டுமான நிறுவனத்துக்கு செலுத்தினார். ஒப்பந்தப்படி, 2017ல் வீட்டை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், கட்டுமான நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காததால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் ரங்கநாதன் கோவிந்தராஜ் புகார் அளித்தார். இதை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 10 லட்சம் ரூபாயை இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயும் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். அடுத்த 90 நாட்களுக்குள், இத்தொகையை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.