/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுற்றுச்சுவர் சேதம் 6 பேருக்கு இழப்பீடு
/
சுற்றுச்சுவர் சேதம் 6 பேருக்கு இழப்பீடு
ADDED : ஜூன் 01, 2025 12:47 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டில், மழைநீர் வடிகால் பணியை 'சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்' எனும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வடிகால் கட்டுமான பணிக்காக, பள்ளம் தோண்டும்போது, வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமாகின.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனியார் நிறுவனம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, நான்காவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன், மண்டல கூட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தார்.
தீர்வாக, மார்ச் 24ம் தேதி, தனியார் ஒப்பந்த நிறுவனம் முதற்கட்டமாக, எர்ணாவூர், மகாளியம்மன் கோவில் தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, ஐந்து பேருக்கு, ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, நேற்று, பஜனை கோவில் தெரு, கன்னிலால் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, ஆறு பேருக்கு, 1.50 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.