/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு
/
கார் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு
ADDED : அக் 27, 2024 08:35 PM
சென்னை:சென்னை, ஆர்.ஏ., புரத்தைச் சேர்ந்தவர் தினகரன், 68; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த 2018 அக்., 11ல், இரு சக்கர வாகனத்தில், ஆர்.ஏ., புரம் அருகே சென்றபோது, திடீரென பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த தினகரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பின், 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, விபத்தால் ஏற்பட்ட படுகாயத்துக்கு, அவ்வப்போது தொடர் சிகிச்சை பெற்று வந்த தினகரன் உயிரிழந்தார்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை, அதன் டிரைவர் இயக்கியதே விபத்துக்கு காரணம். விபத்துக்கு தான் காரணம் இல்லை என்பதை, சரியான ஆதாரங்களுடன் கார் டிரைவர் நிரூபிக்கவில்லை. எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 60.49 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.