/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.3.50 லட்சம் இழப்பீடு
/
வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.3.50 லட்சம் இழப்பீடு
ADDED : ஜன 13, 2025 02:04 AM
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில், 'பசிபிகா' உள்கட்டமைப்பு நிறுவனம் சார்பில், வில்லா வகை வீடுகள் அடங்கிய குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, கல்யாணசுந்தரம், ஹேமா ஆகியோர், 2014ல் முன்பதிவு செய்தனர்.
ஒப்பந்தப்படி, நிலம் மற்றும் வீட்டுக்கான விலை, 1.03 கோடி ரூபாயை, 2015ல் செலுத்தினர். வீட்டை. 2015 ஜூன் 30க்குள் ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இதுகுறித்து, கல்யாணசுந்தரம், ஹேமா ஆகியோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர். ஆணைய விசாரணை அலுவலர் என். உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் உறுதி அளித்த கால கெடுவுக்குள் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. மேலும் பல்வேறு குறைபாடுகள் இருந்துள்ளன.
இதனால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக, மூன்று லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயையும் கட்டுமான நிறுவனம், 90 நாட்களில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.