/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில தீயணைப்பு துறையினருக்கான போட்டி சென்னை மண்டலம் 4வது முறை 'சாம்பியன்'

ADDED : பிப் 15, 2025 08:45 PM

சென்னை:தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், மதுரையில், 13ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், தீயணைப்பு துறை சார்ந்த திறனறி போட்டிகளான, அணி பயிற்சி, நீர்விடுகுழாய் பயிற்சி, ஏணி பயிற்சி, உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், 100 மீட்டர், 400 மீ, 800 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், நீச்சல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும், வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குழு போட்டிகளும் நடத்தப்பட்டன.
போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. இதில் பங்கேற்ற, சென்னை மண்டல அணியில், வடசென்னை, மத்திய சென்னை, வடசென்னை மற்றும் புறநகர் மாவட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். நீச்சல் மற்றும் தடகளப் போட்டியில், சென்னை மண்டல அணி 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது. தவிர, ஒட்டுமொத்த அளவிலும் சென்னை மண்டல அணி, நான்காவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழக தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.