/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டும், குழியுமான பூந்தமல்லி டிரங் சாலை
/
குண்டும், குழியுமான பூந்தமல்லி டிரங் சாலை
ADDED : டிச 24, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான பூந்தமல்லி டிரங் சாலை
பூந்தமல்லி நகராட்சியின் பிரதான சாலையாக டிரங் சாலை உள்ளது. பேருந்து நிலையம், நீதிமன்றம், நகராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன.
இந்த சாலையில் மெட்ரோ மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. அதிக போக்குவரத்துள்ள டிரங் சாலை மழையால் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
- ராஜாராம், பூந்தமல்லி