/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு
/
புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு
புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு
புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு
ADDED : நவ 28, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு
சென்னை- -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவு கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன.
இவற்றில் உணவு தேடி மாடு, நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சண்டையிட்டு நெடுஞ்சாலையில் நுழைவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-.
- என்.பிரபு, பூந்தமல்லி.