
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்மா காலனியில் சுகாதார சீர்கேடு
பெருங்குடி மண்டலம், வார்டு- 182க்கு உட்பட்ட பெருங்குடி, பர்மா காலனியில் கழிவுநீர் கால்வாய் ஆங்காங்கே மூடப்படாமல் சேதமடைந்து உள்ளது. இதனால், குப்பை விழுந்து கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது.
அடைப்பை சரி செய்ய அள்ளிய குப்பை அகற்றப்படாமல், கால்வாயின் ஓரத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.
பர்மா காலனி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், 2வது குறுக்குத் தெருவில் உடைக்கப்பட்ட சிறுபாலம், ஆறு மாதமாக சீர்செய்யப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து, புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, இப்பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை சீர்செய்ய, உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

